கவிஞர்கள் கண்ணோட்டத்தில்... 

"திருக்குமரன் நிறைய வாசிப்பவர்; அதனால் வலுவான விமர்சன அபிப்பிராயங்களைக் கொண்டவர்; தமிழர் விடுதலை அரசியலில் ஈடுபாடு கொண்டவர்; பல்துறைப்பட  எழுதுபவர்; ஒட்டுமொத்தமாகச்  சொன்னால் - பல பரிமாணங்களை உடையவர்; தன்னை மறைத்துக் கொள்ள முடியாதவர், விரும்பாதவர்; இவர் ஒரு ஆளுமைமிக்க, கவித்துவம் உடைய இளைஞர் என்பதில் சந்தேகமே இல்லை"
- பேராசிரியர் கா. சிவத்தம்பி
"எளிய பேச்சு மொழியும், இழுத்து உள்ளமுக்கும் கவித்துவச் சுழிப்பும் கைவரப் பெற்றவர்”

- கவிஞர் அறிவுமதி

“ திருக்குமரன் - எனக்குப் பிடித்த ஈழத்துக் கவிஞர்; போருக்கு முன்னும் பின்னும் ஏராளமான கவிஞர்கள் உருவாகினர். திருக்குமரன் பிறவிக்கவிஞர். இவரது தமிழ் நடை தனித்துவமானது. பல கற்பனைக்கெட்டா துன்புறுத்தல்களுக்குள்ளான இவரது கவிதைகளில் அதன் வலி தெரிந்தாலும் அதனை சொல்லும் அழகியலும் வார்த்தை அடுக்குகளும் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன..”
- கவிதாயினி தாமரை