'தனித்திருத்தல்' தொகுப்பு பற்றி கவிஞர் தாமரை அவர்கள் 

திருச்செல்வம் திருக்குமரன் எனக்குப் பிடித்த ஈழத்துக் கவிஞர். போருக்கு முன்னும் பின்னும் ஏராளமான கவிஞர்கள் உருவாகினர். திருக்குமரன் பிறவிக் கவிஞர். இவரது தமிழ் நடை தனித்துவமானது. பல கற்பனைக்கெட்டாத துன்புறுத்தல்களுக்கு உள்ளான இவரது கவிதைகளில் அதன் வலி தெரிந்தாலும், அதனைச் சொல்லும் அழகியலும், வார்த்தை அடுக்குகளும் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு சில வரிகள். பாரதியார் பாணியில்:

"எந்தை நிலம் நீயெனக்கு 
ஏங்கும் மனம் நானுனக்கு  
வந்த வழி நீயெனக்கு 
வரும் விடியல் நானுனக்கு   
எந்த நிலை தோன்றிடினும் 
என்னுள் எழும் வீரியமே 
சொந்தமண்ணின் வாழ்கனவே 
சுதந்திரமே கண்ணம்மா"

புலம்பெயர்ந்து வாழும் இவரது கவிதைகளை உதிரி உதிரியாக நான் படித்து இருக்கிறேன். இப்போது தொகுத்து புத்தகமாக கொண்டுவந்துள்ளார். உயிரெழுத்து பதிப்பகம் இந்நூலை  வெளியிட்டுள்ளது.

- நன்றி: கவிஞர் தாமரை முகநூல் பதிவு  (17.01.2015).

9.png